உற்பத்தியாளர் கம்பெனிகள் சட்டம்
பா. பூங்குழலி. இரா. அபர்ணா தூயவதி & கே. விஜயலட்சுமி

 

இந்திய அரசாங்கம் உற்பத்தியாளர் கம்பெனிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது. பல்வேறு விவசாய அமைப்புகளும்,  இதர உற்பத்தியாளர்களும்,  உற்பத்தியாளர்  கம்பெனிகளைத் துவக்கி உள்ளனர்;  துவக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்களுக்கு  தன்னார்வத்  தொண்டு அமைப்புகள்  வழிகாட்டும் நிறுவனங்களாகச் செயல்பட்டு வருகின்றன.  உற்பத்தியாளர் கம்பெனிகளைத் துவக்குவதற்கும், துவக்கிய கம்பெனிகளைச் சரியான முறையில் வழிநடத்துவதற்கும், உற்பத்தியாளர்களுக்குப் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளைத் தொடர்ந்து அளிக்க வேண்டும்.  இம்மாதிரியான பயிற்சிகள் அளிக்கும் தமிழ்நாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்கள், விவசாயக் கூட்டமைப்புகள், அரசு அமைப்புகள் ஆகியோருக்கு தமிழில் பயிற்சிக் கையேடுகள் தேவை.  இந்தப் புத்தகத்தில் உற்பத்தியாளர் கம்பெனிகள் சட்டம் முதன்முறையாகத் தமிழ் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள வடிவத்தையே இந்தத் தமிழாக்கத்தில் பின்பற்றி உள்ளோம்.  ஆனால், இதை எளிய நடையில் பாமர மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் வெளியிட முயற்சி செய்துள்ளோம்.

 
விலை : ரூ. 75/-

 

நலவாழ்வுக்கான மூலிகைகள்

து.து. நிர்மலா தேவி & கே. விஜயலட்சுமி


பல கொடிய வியாதிகளையும் குணப்படுத்தக்கூடிய அரிய மூலிகைகள் நம் நாட்டில் காணப்படுகின்றன.  இந்தியாவில் காணப்படும் தாவரங்களில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.  நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இந்த மூலிகைகளை மறந்துவிட்ட நாம், நமக்கு ஏற்படக்கூடிய சிறிய பிரச்சனைகளுக்கும் மாத்திரைகளையும், ஊசிகளையும் நாடிச் செல்கிறோம். ‘நலவாழ்வுக்கான மூலிகைகள்’ என்னும் இந்தப் புத்தகம் நாம் மறந்து விட்ட பல மூலிகைகளை நமக்கு நினைவுப்படுத்துகின்றன.  அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய, எளிதாகக் கிடைக்கக்கூடிய 20 மூலிகைகளைப் பற்றி இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.  

மூலிகைகளின் தோற்றம், பண்பு, வளர்க்கும் முறை மற்றும் அவற்றின் பயன்களும் வண்ணப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.  மேலும், இந்த மூலிகைகளைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் காணலாம். 


விலை : ரூ. 50/- 

இயற்கைவழி வேளாண்மையில்
மண்வள மேம்பாடு மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு

கெ. சுப்பிரமணியன், சுபாஷிணி ஸ்ரீதர் & கே. பரிமளா  


மண் வளமாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள விவசாயிகள் இன்று பல இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி மண்வளத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கிராமங்களில் எளிதாகக் கிடைக்கக்கூடிய இயற்கைப் பொருட்களான தொழுவுரம், பசுந்தழை உரம், பசுந்தாள் உரம், மக்கு உரம் போன்றவற்றைப் பயன்படுத்தி மண் வளத்தை அதிகரிக்க முடியும். மேலும், விவசாயிகள் காலங்காலமாகப் பயிர் பாதுகாப்பில் தாவரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.  சில தாவரங்கள் இயற்கையிலேயே பூச்சிக் கட்டுப்பாட்டுத் திறன் கொண்டுள்ளன. இந்தப் புத்தகத்தில் இயற்கை உரங்களின் தயாரிப்பு மற்றும் எளிதாகக் கிடைக்கக்கூடிய தாவரங்களைப் பயன்படுத்தி கரைசல்கள் தயாரிக்கும் முறைகள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பயன்பாடு குறித்த தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.


விலை : ரூ. 50/-  

இயற்கைவழி வேளாண்மை தரச்சான்றிதழ் ஒரு அறிமுகம்

கே. பரிமளா  & கே. விஜயலட்சுமி


இந்தப் புத்தகத்தில் இயற்கைவழி வேளாண்மை சான்றிதழ் பெறும் வழிமுறைகள் குறித்த ஒட்டுமொத்தத் தகவல்களும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.  மேலும், இதில் சான்றிதழ் வழங்கும் முறைகள் உருவாகிய விதம் குறித்தும், சான்றிதழ் பெறுவதன் இன்றியமையாமை குறித்தும் மற்றும் சான்று பெறும் பல்வேறு முறைகள் குறித்தும் 
கூறப்பட்டுள்ளது.  இவை மட்டுமின்றி, சிறு விவசாயிகள் குழுச் சான்றிதழ் திட்டம் குறித்தும், சான்று பெறும் முறை குறித்தும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. சான்றிதழ் வழங்க தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்றுள்ள நிறுவனங்களின் முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 


விலை : ரூ. 50/-  

உற்பத்தியாளர் கம்பெனிகள் சட்டம் : சில கேள்விகள், பதில்கள்

பா. பூங்குழலி. இரா. அபர்ணா தூயவதி & கே. விஜயலட்சுமி  


இந்தப் புத்தகத்தில் உற்பத்தியாளர் கம்பெனிகள் பற்றிய பல விவரங்கள் எளிய நடையில் கேள்வி, பதில்களாகக் கொடுக்கப்பட்டுள்ளது.  இவற்றில் காணப்படும் பல கேள்விகள் உற்பத்தியாளர் கம்பெனிகளின் இயக்குனர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் வழிநடத்திச் செல்லும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளிடமிருந்து  வந்தவை.  பல கேள்விகளுக்கான விடைகளை வழக்கறிஞர்களிடம் விளக்கங்கள் கேட்டுக் கொடுத்துள்ளோம்.  இந்தப் புத்தகம் உற்பத்தியாளர் கம்பெனிகளுடன் ஏதேனும் ஒரு விதத்திலாவது தொடர்புடைய அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.     
 
விலை : ரூ. 60/-  

வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைத்தலும், பராமரித்தலும்

இரா. அபர்ணா தூயவதி, கெ. சுப்ரமணியன் & கே. விஜயலட்சுமி


இந்தப் புத்தகத்தில் வீட்டுக் காய்கறித் தோட்டத்தை  இயற்கைவழி முறையில் அமைக்க பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  முக்கியமான காய்கறிப் பயிர்களைப் பயிரிடும் மற்றும் பராமரிக்கும் முறைகள் விளக்கப்பட்டுள்ளன.  பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.  இயற்கை உரங்கள், வளர்ச்சியூக்கிகள் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டிற்குத் தேவையான தாவரக் கரைசல்களைத் தயாரிக்கும் முறைகளும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 

 
விலை : ரூ. 50/-  

இயற்கைவழி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள்      

இரா. அபர்ணா தூயவதி, கெ. சுப்பிரமணியன்  மற்றும் கே. விஜயலட்சுமி


நிலக்கடலையை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் இந்தப் புத்தகத்தில்  விவரிக்கப்பட்டுள்ளன. விதைத் தேர்வு முதல் விதைச் சேமிப்பு வரை விவசாயிகளுக்குத் தேவையான எல்லாத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெறுகிறது. மேலும், இயற்கைவழியில் நிலக்கடலை விதை உற்பத்தி முறையும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. 

 
விலை : ரூ. 40/-  

திருந்திய நெல் சாகுபடி   - விளக்கக் கையேடு    

கெ. சுப்பிரமணியன், சுபாஷிணி ஸ்ரீதர்,  கே. பரிமளா மற்றும் கே. விஜயலட்சுமி


இந்தப் புத்தகத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில்பின்பற்றப்படும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகள் குறித்த விவரங்கள் புகைப்படங்களுடன் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் திருந்திய நெல்சாகுபடிக்கு ஏற்ற பருவம், விதை ரகங்கள், நாற்றங்கால் மேலாண்மை, நடவு, நீர் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு மற்றும் பூச்சி, நோய் மேலாண்மை குறித்து விரிவாகவிளக்கப்பட்டுள்ளது.  இந்தப் புத்தகம் திருந்திய நெல் சாகுபடியைக் கற்றறியவும், நடைமுறைப்படுத்தவும் விரும்பும் அனைவருக்கும் ஒருசிறந்த வழிகாட்டியாக அமையும்.

 
விலை : ரூ. 80/-  

Producer Companies Act

Frequently Asked Questions and Answers

B. Poongkhulali, R. Abarna Thooyavathy  & K. Vijayalakshmi 


This book attempts to simplify the Producer Company Act in the form of Frequently Asked Questions.  These questions have been raised by directors, officers and staff of existing Producer Companies and also representatives of NGOs and other agencies which are helping to initiate Producer Companies.   We have provided answers for several questions in consultation with lawyers. We hope that this book will be useful for everyone who have been associated with Producer Companies at least in one way or the other.


Price : Rs. 60/-

 
 

Home Gardening : A Guide to Grow Your Vegetables

R. Abarna Thooyavathy, Subhashini Sridhar & K. Vijayalakshmi 

 

This book provides information on planning and maintaining an organic vegetable garden.  Cultivation and maintenance of important vegetable crops are dealt with in detail.  Management of important pests and diseases are also discussed.  Preparation of various inputs for an organic garden is also given in detail.  Special techniques to be followed while growing vegetable crops also find mention in this book. 


Price : Rs. 50/-

இயற்கைவழி சாகுபடி தொழில்நுட்பங்கள் (துவரை, உளுந்து, பச்சைப்பயறு)

சுபாஷிணி ஸ்ரீதர், கெ. சுப்ரமணியன், அ. ராஜேஷ் & கே. விஜயலட்சுமி 


இந்தப் புத்தகத்தில் முக்கியப் பயறு வகைகளான துவரை, உளுந்து மற்றும் பச்சைப்பயறை இயற்கைவழி முறையில் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. பட்டத்திற்கேற்ற ரகத் தேர்வு, விதை நேர்த்தி முறைகள், இயற்கைவழி பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகள், இயற்கை உரங்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாடு போன்ற விவரங்களை இந்தப் புத்தகத்தில் காணலாம். தரமான விதை உற்பத்தி முறைகள் பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகம் விவசாயிகளுக்கு பெருமளவில் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். 
 

விலை : ரூ. 45/-  

 

 

குறிப்பு : புத்தகம் தேவைப்படுவோர் sempulamss@gmail.com  என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

 

Note :  For your requirements please email us at sempulamss@gmail.com